உத்தரப்பிரதேசம் குஷிநகர் அருகே சலேம்கர் (Salemgarh) சுங்கச்சாவடியில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுனர் தப்பியோடியதாக தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் உறவினர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.