Bus Accident | சரக்கு வாகனம் மீது வேகமாக மோதிய அரசு பேருந்து - உள்ளே இருந்த பயணிகள் நிலை?
திருபத்தூர் அருகே மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பச்சை குப்பம் பகுதியில் வேலூரில் இருந்து மாடுகளுடன் ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது, திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த அரசு விரைவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனம் சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அஹ்மத் பாஷா மற்றும் அபு ஆகிய இருவரும் மூன்று மாடுகளும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.