வாகன விபத்தில் சிறுவன் காயம்..."ரூ.80000 கட்டச்சொல்லி கறார்"- விடாமல் வெளியேறிய ரத்தம்

Update: 2025-06-01 02:21 GMT

Thiruvallur | வாகன விபத்தில் சிறுவன் காயம்... ``80 ஆயிரம் ரூபாய் கட்டச்சொல்லி கறார்''- ஆபரேஷன் முடிந்த பிறகும் விடாமல் வெளியேறிய ரத்தம்

கடவுளும், டாக்டரும் ஒண்ணுனு சொல்வாங்க...

அப்படி நம்பி தான் இந்த குடும்பமும் சாலை விபத்துல சிக்கிய 12 வயசு மகன இந்த பிரைவேட் ஹாஸ்பிட்டல் கையில ஒப்படைச்சி இருக்காங்க.

வலது கால்ல சர்ஜரி பண்ணனும்... Operation Fees 80 ஆயிரம்... அந்த பணத்த கட்டிட்டா உங்க பையனுக்கு எந்த பிரச்சனையும் இல்லனு இந்த மருத்துவனையோட டாக்டர்ஸ் நம்பிக்கை கொடுத்திருக்காங்க...

கடன உடன வாங்கி கேட்ட பணத்த கட்டவும் ஆப்ரேஷனும் நல்லாபடியா முடிஞ்சிருக்கு...

இனி தங்களோட மகன் பழையபடி ஓடியாடி விளையாட போறான்னு நினைச்சிட்டு இருந்த நேரத்துல தான் தவறான சிகிச்சையால இப்ப சிறுவனோட ஒரு கால வெட்டி எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்காங்க.

இந்த Patient-டோட முழு Case Summary-ஐயும் அலசி ஆராய விசாரணைல இறங்கினோம். பாதிக்கப்பட்ட சிறுவனோட பேரு கிஷோர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதிய சேர்ந்த பார்த்தீபனோட செல்லமகன்.

தற்போது 12 வயசாகும் கிஷோர் அருகிலுள்ள பள்ளிகூடத்துல படிச்சுட்டு வந்திருக்காரு.

இந்நிலையில சென்ற 12 ம் தேதி நடந்த ஒரு ரோடு ஆக்ஸிடென்ட்ல கிஷோரோட கால்ல எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கு. உடனடியா அவரை மீட்ட பொதுமக்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைல அட்மிட் பண்ணி இருக்காங்க.

கிஷோருக்கு முதற்கட்ட சிகிச்சையளித்த அரசு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அதே பகுதில உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போக சொல்லி Refer பண்ணி இருக்காங்க...

பார்த்தீபனும் “டாக்டர் எல்லாம் நம்ம பையனோட நல்லதுக்காக தான் சொல்றாருனு“ உடனடியா அவர் பரிந்துரை பண்ண மருத்துவமனையில கிஷார அட்மிட் பண்ணி இருக்காரு.

அவசர அவசரமா எல்லா டெஸ்ட்டையும் எடுத்த மருத்துவர்கள் கிஷோருக்கு வலது கால்ல சர்ஜரி பண்ணனும் அதுக்கு 80 ஆயிரம் செலவாகும்னு தெரிவிச்சு இருக்காங்க.

இதை தொடர்ந்து பார்த்தீபன் அட்வான்ஸா 20 ஆயிரம் பணம் கட்டவும் ஆப்ரேஷன் முடிஞ்சிருக்கு.

மகனுக்கு இனி எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாதுனு பார்த்தீபனும் அவருடைய மனைவியும் வேண்டாத கோவில்களே இல்ல...

ஆனா, ஆப்ரேஷனுக்கு பிறகு கிஷோரோட வலதுகால்ல இருந்து ரத்த நிற்காம வெளியேறி இருக்கு... எதோ தவறா நடக்குறத உணர்ந்ததும் தனியார் மருத்துவர்கள் மறுபடியும் கிஷோர்ர அரசு மருத்துவமனைல சிகிச்சை எடுத்துக்க பரிந்துரைச்சதா சொல்லப்படுது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனைல கிஷோரோட வலதுகால்ல பரிசோதனை பண்ண மருத்துவ நிபுணர்கள் தவறான சிகிச்சையால நரம்பு கட் ஆகி இருக்கு... இனி கால்ல வெட்டி அகற்றியாகனும் தெரிவிக்கவும் பெத்தவங்க அதிர்ந்து போயிருக்காங்க. இதை தொடர்ந்து மருத்துவர்கள் வேற ஆப்ஷன்னே இல்லனு தெரிவிக்கவும் கிஷோரோட பெத்தவங்களும் சம்மதித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலமா கிஷோரோட கால் வெட்டி எடுக்கப்பட்டு இருக்கு. இது எல்லாம் நடந்து முடிஞ்ச பிறகு பெத்தவங்களோட மனசு ஆரால சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு அழைச்சிட்டு வந்து நீதி கேட்டு போராட்டம் நடத்தி இருக்காங்க.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கமிஷனுக்காக இந்த தனியார் மருத்துவனைக்கு பரிந்துரைந்த அரசு மருத்துவரை பணி நீக்கம் செய்யனும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குரிய இழப்பீடு வழங்கனும் உள்ளிட்ட கோரிக்கைய வெச்சு கண்டன ஆர்பாட்டாம் மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்