MK Stalin House Bomb Threat | திடீர் பரபரப்பான CM ஸ்டாலின் இல்லம் - விசாரணைக்கு பின் வெளிவந்த தகவல்
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சையை சேர்ந்த நசீர் அகமது என்பவரை கைது செய்துள்ள போலீசார், அவர் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர், முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.