உதகை படகு இல்ல ஏரியில் மது போதையில் தண்ணீரில் தத்தளித்த நபரை படகோட்டி பத்திரமாக மீட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏரியில் ஒருவர் மது போதையில் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவரை படகோட்டி ஒருவர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மது போதையில் ஏரியில் குதித்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.