அதிமுக தொண்டர்களிடமிருந்தும், பாஜகவிடமிருந்தும் தன்னை காத்துக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், அதிமுகவை உடைக்க பாஜக முயல்வதாக சாடினார்.