BJP Sarathkumar | "பதவிக்காக வரவில்லை, மக்கள் சேவை தான் முக்கியம்" - சரத்குமார் உறுதி
பா.ஜ.க.வில் எனக்கு பதவி வரும்போது வரட்டும்... என்னை பொறுத்தவரை உண்மையாக உறுதியாக உழைக்க வேண்டும் என்று நடிகரும் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்... பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை ஒட்டி சரத்குமார் சென்னை தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் மீனவர்களுக்கான வலைகள், காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய் வீக் என்ட் பாலிடிக்ஸ் செய்வதாக கடுமையாக விமர்சித்தார்...