சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பைக் - பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி காட்சி
திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியைச் சேர்ந்த மணிமாறன் என்ற இளைஞர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடைக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். பைக்கை வெளியே நிறுத்தி விட்டு சென்ற நிலையில், திடீரென பைக் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக, தீயை அணைக்க எவ்வளவோ முயற்சி செய்தும், மளமளவென எரிந்த பைக் முற்றிலுமாக சேதமடைந்தது.