Bike Accident Cctv | கண்ணிமைக்கும் நொடியில் உடல் நசுங்கி பலியான இளைஞர் - பதறவைக்கும் வீடியோ

Update: 2025-06-20 05:56 GMT

கன்னியாகுமரி மாவட்டம், செம்மங்காலை பகுதியில் நிகழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பாகோடைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் புத்தன்சந்தை சாலையில் சென்றபோது, எதிரே வந்த பெண் ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிலை தடுமாறிய சஞ்சீவ், எதிரே வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சஞ்சீவுடன் வந்த நண்பரும், எதிரே வந்த பெண்ணும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்