ஜீப்பின் மீது ஏறி வனத்துறையினரை தாக்க பாய்ந்த கரடி - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2025-05-02 08:57 GMT

நாட்றம்பள்ளியில் பிடிபட்ட கரடியை காட்டுக்குள் விடும்போது, கரடி வனத்துறையினரை தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் பேட்டராயன் வட்டம் பகுதிக்குள் வழித்தவறி வந்த கரடி, மணிமேகலை என்ற பெண்ணை தாக்கியது. இதைத்தொடர்ந்து, ஒருவரது வீட்டில் தஞ்சமடைந்த கரடியை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். பிறகு பிடிபட்ட கரடியை வனப்பகுதிக்குள் விடும்போது, கரடியானது அப்படியே திரும்பி, வனத்துறையினரின் ஜீப்பின் மீது ஏறி தாக்க முயன்றது. இதனால், செய்வதறியாத வனத்துறையினர், ஜீப்பில் இடைவிடாமல் ஹாரன் சத்தம் எழுப்பிய நிலையில், அச்சத்தில் கரடி காட்டுக்குள் ஓட்டம்பிடித்தது. இதனால், வனத்துறையினர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். காட்டுக்குள் சென்ற கரடியின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்