பஸ்ஸில் சென்றபோது BDO திடீர் மரணம் - நேரில் வந்த கலெக்டர்.. அரசு அதிகாரிகளை உலுக்கிய சம்பவம்
பேருந்தில் சென்ற போது நெஞ்சுவலி - வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மரணம்
சங்கரன்கோவிலில் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, பேருந்தில் பயணிக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்த அவர், புளியங்குடி அருகே பேருந்து சென்றபோது மயங்கி விழுந்தார். பின்பு உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மாவட்ட ஆட்சியர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தனது மகனின் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் இறந்தது குடும்பத்தினருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.