குழந்தையுடன் தூங்கும் தாய்மார்களே கவனம்.. கவனம் - அரங்கேறிய கோர சம்பவம்
கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
ஓட்டேரி அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி குளக்கரை சாலையை சேர்ந்தவர்கள் அபினாஷ், உஷா தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தாய் உஷாவுடன் தூங்கிக் கொண்டிருந்த இரண்டாவது குழந்தை நகுலேஷ்வரன் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனை 5கொண்டு செல்லப்பட்டார். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.