Chennai Police | கல்லை வீசி வெட்ட முயன்ற இளைஞர்.. அடுத்த நாளே மாவுகட்டு போட்ட சென்னை போலீஸ்
சென்னை பெரம்பூர் அருகே சரித்திர பதிவேடு ரவுடி, போலீசாரை கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று ஏகாங்கிபுரம் ராஜீவ் காந்தி நகர் அருகே கத்தியுடன் சரித்திர பதிவேடு ரவுடி அப்பு என்பவர் மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். அங்கு சென்ற போலீசார் அப்புவை கைது செய்ய முயன்ற போது, அங்கிருந்து தப்பி ஓடி போலீசாரை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். மேலும் தன்னை தானே கிழித்து கொண்டும் கற்களை வீசி எரிந்தும் ரகளை செய்துள்ளார்.
அப்பு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் போலீசாரை கண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். போலீசார் அவரை பிடிக்க முயன்ற போது, அப்பு கீழே விழுந்து இடது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.