Republicday | 7.52 மணிக்கு.. பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் மெரினா..

Update: 2026-01-26 03:01 GMT

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடி ஏற்றுகிறார்.

மெரினா கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறும் இவ்விழாவையொட்டி, பிரமாண்டமான பந்தல்கள் போடப்பட்டுள்ளன. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். 7.54 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமி ரவியுடன் வருகிறார்.

தொடர்ந்து, காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்