நாகர்கோவிலில் கல்லூரி வளாகத்தில் தவறான ஊசிகள், மருந்துகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன....
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பாலியல் தூண்டுதலுக்கு செலுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஊசிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்வதிபுரம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில், ஏராளமான மருந்துகள், ஊசிகள் மற்றும் மதுபாட்டில்கள் சிதறி கிடந்துள்ளன.
கல்லூரி வளாகத்தில் இதனை பயன்படுத்தியது யார்? மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அவை பெறப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.