Rajinikanth | Vijay | ``ரஜினியே மறுத்தார்.. விஜய்க்கு அப்படியொரு சீன் வைத்திருந்தால்..’’
விஜய்யின் பகவதி கிளைமேக்ஸ் குறித்த ரகசியம் சொன்ன இயக்குநர் ஏ.வெங்கடேஷ்
பகவதி படத்தில் விஜய் முதல்வராவது போன்று முதலில் கிளைமாக்ஸ் வைத்திருந்ததாகவும், பிறகு கிளைமாக்ஸை மாற்றியதற்கான காரணத்தையும் படத்தின் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், முதலில் படத்தில் பகவதி கதாபாத்திரம், தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்கும் சூழல் வருவது போன்று கிளைமாக்ஸை முடிவு செய்திருந்ததாக தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில் வெளியாகி இருந்த பாபா படத்தில், முதல்வராவதற்கு ஏழாவது மந்திரத்தை ரஜினிகாந்த் உபயோகிப்பார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர் அதை பயன்படுத்த மாட்டார் என தெரிவித்தார்.
ரஜினிகாந்தே மறுத்து விட்டபோது, விஜய் முதல்வராவது போன்ற காட்சி வைத்தால் அது ஓவர்டோஸ் ஆகிவிடுமோ என்கிற அச்சத்தில் அந்த கிளைமாக்ஸை கைவிட்டதாக தெரிவித்தார்.
படத்தின் கிளைமாக்ஸை மாற்ற விஜய் முதலில் சம்மதிக்கவில்லை என்றும், முழு ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு இதுபோன்ற படங்களை பண்ணலாம் என சமாதானப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய்க்கு ஏற்கெனவே அரசியல் ஆசை இருந்துள்ளது என்றும் அந்த பேட்டியில் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.