College reopen | Arts and Science College தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறப்பு
கோடை விடுமுறைக்கு பிறகு, தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. செமஸ்டர் தேர்வுக்கு பிறகு, ஒரு மாதத்திற்கு மேலாக மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் இன்று கல்லூரி வகுப்புகள் தொடங்குகின்றன. கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த புதிய மாணவர்களுக்கான வகுப்புகளும் இன்று துவங்குகின்றன. அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வு மூலமாக, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டன. தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் உட்பட மொத்தமாக 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளனர்.