தவெக தனித்து போட்டியா? - நறுக்குனு சொன்ன ஆதவ்

Update: 2025-05-21 02:52 GMT

தவெக தனித்து போட்டியா? - ஆதவ் அர்ஜுனா சொன்ன பதில்

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுமா...? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா ...? என்பது குறித்து வருகிற டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், வக்பு சட்ட திருத்தம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை வாக்கு வங்கியாக அணுகக் கூடாது என்றும் வலியுறுத்தினார். வருகிற டிசம்பர் மாதம் த.வெ.க-வின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்