இதுவரை கிடைக்கா அரிய பொக்கிஷம்.. முதல்முறை பூமிக்குள் கிடைத்தது.. தமிழன் பெருமையை மீண்டும் உலகின் பொட்டில் அறைந்து சொன்னது..!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் முதல் முறையாக சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த மூன்று கட்ட அகழாய்வுகளில் தங்க ஆபரணங்கள், சூது பவள மணி, காளை உருவ பொம்மை, சங்கு வளையல்கள், செப்பு காசுகள் சுடுமண் முத்திரை உள்ளிட்ட 10 அயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப் பெற்றதை அடுத்து, "வெம்பக்கோட்டை எனும் விசித்திரக்கோட்டை" என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.