திக்குமுக்காடும் சென்னை அண்ணா சாலை - வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-03-04 15:16 GMT

சென்னை அண்ணா சாலையில் சாலை பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

சென்னை மாநகரின் பிரதான சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 3.20 கிமீ நீளத்திற்கு உயர்மட்ட சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அலுவல் நேரங்களில் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சாலைப் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்