தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, உண்மையிலேயே மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா என கேள்வி எழுப்பியுள்ளார். ஆரம்ப சுகாதார மையங்களில் இன்னும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், அரசால் பணி ஆணை வழங்கப்பட்ட இரண்டாயிரத்து 642 மருத்துவர்கள் எங்கு நியமிக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மருத்துவர்கள் நியமனம் அரசின் கண்துடைப்பு அறிவிப்பா எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.