சென்னை பரங்கி மலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையயத்தில், ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடந்த நிலையில்,
ராணுவ வீரர்களை சக வீரர்கள் தோலில் சுமந்தபடி கோஷங்களை எழுப்பினர்.
இதை தொடர்ந்து பயிற்சி முடிந்து வந்த ராணுவ வீரர்களுக்கு அவரது பெற்றோர் கட்டி அணைத்து நெகிழ்ச்சியுடன் பாராட்டுக்களை பகிர்ந்தனர்.
ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்புகிறவர்கள் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என வட சென்னையில் இருந்து பயிற்சியில் தேர்ச்சி பெற்ற வரபிரசாத் தெரிவித்தார்.