சென்னை மேடவாக்கம்- மாம்பாக்கம் பிரதான சாலை வீரபத்திரன் நகர் அருகில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீதும், சரக்கு லாரி மீதும் தண்ணீர் லாரி மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், சரக்கு வாகனம் மின் கம்பம் மீது மோதி முன்பகுதி சேதமடைந்தது. மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.