சத்தமின்றி வந்து சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Update: 2025-09-17 05:05 GMT

சினிமா இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் தவிர, கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் அவ்வப்போது வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வருகை தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்