சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணை மீட்ட அதிமுக நிர்வாகி

Update: 2025-07-25 10:29 GMT

சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணை மீட்ட அதிமுக நிர்வாகி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில்,

சாலை விபத்தில் காயமடைந்த இஸ்லாமிய பெண்ணை, ராணிப்பேட்டை அதிமுக மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார், மற்றொரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனது காரில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். தென்கடப்பந்தங்கள் பைபாஸ் சாலையில், இஸ்லாமிய பெண் ஒருவர் மழையால் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நிலையில், இதனைக் கண்ட S.M.சுகுமார், உடனடியாக தனது காரில் இருந்து இறங்கி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, காயமடைந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்