வேளாண் கல்லூரி விவகாரம் - அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளாக வேளாண் கல்லூரியை திருமண மண்டபத்தில் நடத்தி மாணவ, மாணவிகளை தி.மு.க அரசு வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில், கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.