Actress Ambika | அம்பிகா எடுத்த பெரிய முடிவு - 1 நொடி சென்னை கமிஷனர் ஆபீஸே திகைத்த தருணம்

Update: 2025-10-23 05:04 GMT

தன்னார்வலராக பணியாற்ற விருப்பம்- நேரில் வந்து பதிவு செய்த நடிகை அம்பிகா


வடகிழக்கு பருவமழையின்போது தன்னார்வலராக பணியாற்ற விருப்பம் தெரிவித்து, நடிகை அம்பிகா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்தார்.

சென்னைபோக்குவரத்து இணை ஆணையர் விஜயகுமார் அழைப்பு விடுத்ததன் பேரில், அவர் வெளியிட்ட வலைத்தள லிங்கை பயன்படுத்தி பலர் தன்னார்வலர்களாக பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில், நடிகை அம்பிகா, வலைத்தள லிங்க் மூலம் பதிவு செய்ய முடியாததால் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்தார். வாட்ஸ் அப் குழுவில் ஆயிரம் பேர் இணைந்து விட்டதால், தனது பேரை சேர்க்க முடியவில்லை என கூறி, தனது எண்ணை காவல் துறை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டதாக நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்