TN School Education News| "இந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை உறுதி" - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக, முதன்மை கல்வி அலுவலர்கள் , மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற்று வந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாமல், அதிகபட்ச வித்தியாசம் இருந்தால் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.