கோவை பட்டணம் புதூரில் கண்டெய்னர் லாரி மோதி அரசுப் பள்ளி ஆசிரியர் விவேகானந்தர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பட்டணம் பகுதியை சேர்ந்த ஆங்கில ஆசிரியர், செல்லப்பம்பாளையம் அரசு பள்ளியில் பணி முடித்து வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கினார். விபத்து தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.