ஒரே நேரத்தில் 2 லாரி, பஸ், கார் மோதிய பயங்கரம்... அலறிய மக்கள் - திக்திக் சம்பவம்
திண்டிவனம் அடுத்த தென் பசாரில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கொண்டதால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு வந்த லாரியின் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த மற்றொரு லாரி, அரசு பேருந்து மற்றும் கார் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக மோதி கொண்டன. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் லேசான காயமடைந்த நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.