ஆண்டாள் கோவில் தேரோட்டம் "கோவிந்தா.."கோஷத்தால் அதிர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை ஒட்டி முன்னோட்டம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை ஒட்டி நடைபெற்ற முன்னோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பிறந்த தினமான ஆடிப்பூர திருவிழா, வருகிற 28-ஆம் தேதி விமரிசையாக நடைபெற இருக்கிறது. இதையொடி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரெங்க மன்னார் பதினாறு சப்பரம் பொருந்திய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து கோவிந்தா, கோவிந்தா எனக் கோசமிட்டு இழுத்து சென்றனர். தேரானது 4 ரத வீதி வழியாக வந்து தேர் நிலையத்தை வந்தடைந்தது.