நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சிங்கரா நீர்மின் நிலையத்தை சுற்றி அடர் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று நீர் மின் நிலைய குடியிருப்பு பகுதிக்குள் வந்து மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளது. பின்னர் அந்த யானை வீட்டின் முன்பு இருந்த புல் மைதானத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.