தமிழகம் வந்த ஜனாதிபதிக்கு இன்ப அதிர்ச்சி - பார்த்து பார்த்து அளவற்ற மகிழ்ச்சி

Update: 2025-09-04 02:40 GMT

தேசிய கல்வி கொள்கை குறித்து பேசிய ஜனாதிபதி முர்மு

பாரம்பரியம் மற்றும் நவீனத்தை ஒன்றாக கொண்டு தான் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, பட்டங்களை வழங்கினார். அப்பொழுது பேசிய அவர், பல்கலைக்கழகத்தில் பயிலும் 3000 மாணவர்களில் அதிக அளவில் பெண்கள் பயில்வதும், மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கப்பதக்கம் பெற்றிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறினார். மேலும், முன்பை விட தற்பொழுது நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்வது எளிமையாக உள்ளது எனக்கூறிய அவர், பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் சிறப்பு அம்சங்களை ஒன்றாக கொண்டு தான், தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்