பண்ருட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருத்துறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர், தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் சபரிமலைக்குச் சென்று வந்த யுவராஜ், சாமி பிரசாததை நண்பர்களுக்கு கொடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருத்துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.