பழனி கோயில் உண்டியலில் வித்தியாசமான முறையில் பணம் திருடியவர் கைது

Update: 2025-05-19 09:44 GMT

பழனி கோயில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் உண்டியலில் காகித அட்டையை வைத்து, நூதன முறையில் பணத்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். பழனி முருகன் கோயிலில் வழக்கம்போல் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரு உண்டியலில் மட்டும் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்ததால், கோயில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட உண்டியல் இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், காகித அட்டையை உண்டியலில் பணம் விழவிடாமல் வைத்து, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நூதன முறையில் பணம் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ரூ. 5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்