கடலில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞரை கடைசி நொடியில் காப்பாற்றிய காட்சி
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கோடை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கடலில் குளிக்கும்போது அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாமியார்பேட்டை கடற்கரையில் பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி கணேஷ் என்ற இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் கடலுக்குள் இறங்கி அவரை உயிருடன் மீட்டனர்.