180 டயர்கள் கொண்ட லாரியில் எடுத்து செல்லப்பட்ட 200 டன் பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே
ஒரே கல்லில் செய்யப்பட்ட 200 டன் எடையிலான பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை பல்வேறு சிக்கல்களைத் தாண்டி 180 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டது. 36 அடி உயரம் கொண்ட இந்த ஆஞ்சநேயர் சிலையை வழியில் கொரக்கோட்டை கிராம மக்கள் சூடம் ஏற்றி வணங்கி வழிபாடு செய்தனர்.. மேலும் காவல்துறையினரின் உதவியுடன் பத்திரமாக சிலை பழவேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது