Drug addiction || ரோட்டில் திறந்தமேனியாக திரிந்து அலப்பறை செய்த போதை ஆசாமி

Update: 2025-06-26 03:37 GMT

தலைக்கேறிய போதை - தன்னிலை மறந்து ரகளை

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் நிர்வாணமாக வலம் வந்து சாலையில் சென்றவர்களை தாக்கிய இளைஞரின் செயல் முகம் சுளிக்க செய்தது. போதை தலைக்கேறிய நிலையில், தன்னிலை மறந்த இளைஞர் நிர்வாணமாக சாலையில் சுற்றித்திரிந்தார். மேலும், அவ்வழியாக செல்பவர்களையும் தாக்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பொதுமக்கள் அதிகம்​ வந்து செல்லும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவதால் கடையை மாற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்