`17 வயது’ சிறுவனை 2ம் கல்யாணம் செய்த `30 வயது’ பெண் - `அந்த’ உறவுக்கு அழைத்ததால் செய்த விபரீதம்
`17 வயது’ சிறுவனை 2ம் கல்யாணம் செய்த `30 வயது’ பெண் - `அந்த’ உறவுக்கு அழைத்ததால் செய்த விபரீதம்
தவறான உறவுக்கு அழைத்தவர் கொலை வழக்கில் ட்விஸ்ட்
திருவள்ளூர் மாவட்டத்தில் தவறான உறவுக்கு அழைத்த நபரை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசிய வழக்கில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அய்யப்பாக்கத்தை சேர்ந்த உஷாவின் கணவர், சில வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட நிலையில், உஷா 17 வயது சிறுவனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அரவிந்த் என்பவர் தொடர்ந்து தவறான உறவுக்கு உஷாவை வரும்படி தொந்தரவு செய்துள்ளார். ஆத்திரமடைந்த உஷா, தனது 17 வயது கணவர், ஜிம் மாஸ்டர் உட்பட மூவருடன் சேர்ந்து, அரவிந்தை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசியது, போலீசார் விசாரணையில் அம்பலமானதையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.