9th மாணவனுக்கு சக மாணவர்களே செய்த கொடூரம் - உடல் முழுக்க இருந்த கொடூர காயங்கள்

Update: 2025-10-14 06:31 GMT

9th மாணவனுக்கு சக மாணவர்களே செய்த கொடூரம் - உடல் முழுக்க இருந்த கொடூர காயங்கள்

அரசு பள்ளி மாணவனை பெல்ட்டால் தாக்கிய சக மாணவர்கள்

ஓசூர் அருகே பள்ளி மாணவனை சக மாணவர்கள் பெல்ட்டால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே முல்லை நகர் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவன் பணம் திருடியதாகக் கூறி சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து பெல்ட்டால் சரமாரியாக தாக்கி துன்புறுத்தியுள்ளனர். உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை கொடூரமாக தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறுவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்