8ம் வகுப்பு மாணவனை கடித்தே கொன்ற தெருநாய் - கதறி அழுத பெற்றோர்

Update: 2025-04-12 07:16 GMT

ஸ்ரீபெரும்புதூர் அருகே நாய் கடித்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு புதிய காலனி பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவரது மகன் விஷ்வா வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது நாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்த அவரை, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்