மனிதநேயம் அறக்கட்டளையில் படித்த 8பேர் CAPF பதவிக்கு தேர்வு-சைதை துரைசாமி வாழ்த்து

Update: 2025-06-15 02:01 GMT

சென்னையில், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதயேம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் பயின்ற 8 பேர், UPSC நடத்திய மத்திய ஆயுதப் படை காவல் உதவி கமாண்டன்ட் பதவிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வியகத்தில் 21 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், 8 மாணவர்கள் வெற்றி பெற்று, ஆயுதப்படை காவல் உதவி கமாண்டன்ட் பதவிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில், கேரளாவைச் சேர்ந்த அரவிந்த் ஐஸ்வர்யன் குட்டி என்ற மாணவர், அகில இந்திய அளவில் 69ஆவது இடத்தை பிடித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரிய நாராயணன் என்பவர், 96ஆவது இடத்தையும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தவஸ்வி அருணாச்சலம் என்பவர் 120ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் மனித நேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்