TN Govt | "தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள்" - கோர்ட்டில் அரசு சொன்ன தகவல்
தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என தமிழக அரசு தரப்பில், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு நபர்களை வெளியேற்ற கோரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர். இவர்களில் 16 பேர் நீண்ட கால விசா பெற்றும், 24 பேர் நீண்ட கால விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் மீது 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மியான்மரை சேர்ந்த 95 பேர் தங்கி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதே போல மத்திய அரசு தரப்பில், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தும் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.