சிறுமியை சீரழித்த கிழட்டு மிருகம் சாகும் வரை.. பெண் நீதிபதி கொடுத்த தரமான தீர்ப்பு
திருச்செந்தூரில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
16 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள்தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது... திருச்செந்தூரில் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தங்கபாண்டிக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்