16 வயது சிறுமியை ஏமாற்றி 2வது திருமணம் செய்த 35 வயது நபர்

Update: 2025-07-10 06:10 GMT

நீலகிரியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்தவரை,போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.உதகை அருகே 16 வயதான 10 ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த 3 நாட்களுக்கு முன் காணவில்லை.பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் 35 வயதான சுரேஷ் என்ற ராஜா சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கடத்தி சென்றது தெரிந்தது.மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும்,குடும்ப சண்டையால் மனைவி விட்டு சென்றதும் தெரிய வந்தது.இதனையடுத்து போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்