நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 சவரன் நகை கொள்ளை - அதிர்ச்சியில் உறைந்த பெண்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தளவாய் என்பவர், தனது மனைவி லட்சுமியுடன் தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் தாம்பரத்திற்கு திரும்பியுள்ளார்.
வீட்டிலிருந்து கிளம்பும்போது நகைகள் அடங்கிய ஒரு பையை பூட்டு போட்டு, அதை பத்திரமாக எடுத்து வந்துள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி வீடு திரும்பும் போது பையை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து போலீசில் புகார் அளிக்க சென்ற தளவாய் மற்றும் அவரது மனைவியிடம் புகாரை வாங்காமல் போலீசார் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.