2ஜி வழக்கு மூலம் பிரபலமடைந்த நீரா ராடியா திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். 2009ம் ஆண்டு 2ஜி வழக்கில் பல்வேறு நபர்களிடம் நீரா ராடியா பேசிய டெலிபோன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருப்பதியில் நடந்த சிறப்பு சேவையில் நீரா ராடியா கலந்து கொண்டு வழிபட்டார். பின்னர் அவருக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். பல ஆண்டுகளுக்குப் பின் சிறப்பான தரிசனம் செய்ததாக நீரா ராடியா தெரிவித்தார்