"இந்த ஆண்டு 29.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்"-அமைச்சர் சக்கரபாணி
இந்த ஆண்டு 29.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்/கடந்த மூன்று ஆண்டுகளாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் பணி தொடங்கி நடைபெறுகிறது- அமைச்சர் சக்கரபாணி/நேரடி கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது- அமைச்சர் சக்கரபாணி/ஒரத்தநாடு அருகே அதிநவீன கொள்முதல் நிலையம் திறப்பு- அமைச்சர் சக்கரபாணி/145 நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது- அமைச்சர் சக்கரபாணி
இந்த ஆண்டு இதுவரை விவசாயிகளிடம் இருந்து 29.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் பணியை தொடங்கி வருவதாகவும், நேரடி கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
ஒரத்தநாட்டில் அதிநவீன கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்றும், 145 நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.