#JUSTIN || MK Stalin || 24/7 கடைகள் திறந்திருக்க அனுமதி - அரசாணை வெளியீடு
24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜுன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்” என அறிவித்தார்.