ஊரே சுற்றி நிற்க கதற கதற 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்... அதிர்ச்சி வீடியோ

Update: 2025-06-07 14:52 GMT

ஊரே சுற்றி நிற்க கதற கதற 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்... அதிர்ச்சி வீடியோ

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில், 14 வயது சிறுமியை அவரது தாய்மாமனுக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்லகெரே கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை அவரது பெற்றோர், தாய்மாமனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். சிறுமியோ, தற்போது திருமணம் செய்ய விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். அதை ஏற்காத பெற்றோர் ஊரார் முன்னிலையிலேயே அச்சிறுமியை கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்தி, வலுக்கட்டயமாக தாய்மாமன் கையால் தாலிகட்ட செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்துள்ளனர். மேலும், சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்